தூத்துக்குடி பாளை ரோடு எம்ஜிஆர் பூங்கா பின்புறம் உள்ள பொது மயானம் பகுதியிலுள்ள தேவையற்ற முள் செடிகள் அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாளை ரோடு எம்ஜிஆர் பூங்கா பின்புறம் உள்ள பொது மயானம் பகுதியில், கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பல்வேறு வகையான செடி கொடிகள் படர்ந்த நிலையில் அடந்து கிடந்தன. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்க உள்ளதாகவும், தேவையற்ற செடிகளை அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வரப்பெற்றதையடுத்து, இன்று ( 19.8.2022 ) கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பல்வேறு வகையான செடிகள் அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
இதில், ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் அருண்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.