இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில செயலர் கனல் கண்ணன் கைதை கண்டித்து, தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில செயலர் கனல் கண்ணன் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, கனல் கண்ணன் கைதை கண்டித்து, தூத்துக்குடி இந்து முன்னணியின் சார்பாக தாளமுத்து நகர் மெயின் ரோட்டில், ஒன்றிய தலைவர் சிபு தலைமையில், மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவேந்திரா, சரவணகுமார், நாராயண ராஜ், பலவேசம், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.