• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை!

  • Share on

தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்த படியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி வேண்டுகோள் படியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார்.

பீச் ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக அமைப்பு சாரா தொழிலாற்சஙக மாநில தலைவர் மகேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்.

அலங்கார வண்டியில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் வரலாறு குறித்த தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பபட்டது. தேசிய கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தி பாதயாத்திரையாக சென்றவர்கள் புதுதெரு வழியாக மட்டக்கடை, 1ம் கேட் காந்தி சிலை, பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை முடித்தனர்.

இதில், மாநில செயலாளர் சிந்தியா வயலட் லில்லி, மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, எஸ்.பி.ராஜன், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பககனி அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யூ.சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட நிர்வாகிகள் ஏ.டி.பிரபாகரன், அருணாசலம், கோபால், மார்க்கஸ் ஜான்சன், அந்தோணிசாமி, ஜெயகிங்ஸ்டன், பாஸ்கர், அந்தோணிகுருஸ், ராதாகிருஷ்ணன், ஜெயராஜ்,

பாலகிருஷ்ணன், முடிசுடி, சின்னகாளை, மைக்கேல், அப்துல்மஜீத், கிருஷ்ணன், முனியசாமி, அழகுவேல், மணி, கந்தசாமி, குமாரமுருகேசன், சித்திரை பால்ராஜ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், கலை பிரிவு தலைவர் செல்வராஜ், வெங்கடேசன், கருப்பசாமி, சாந்தி, பீரித்தி, கனகராஜ், இருதயராஜ், தனுஷ், ஜான்எபனேசர், ராஜரத்தினம், வாசிராஜன், மகாலிங்கம், சந்திரன், பெட்டின், அம்மாகனி, ரூபன் வேதசிங், காமராஜ், சிவன்யாதவ், புவனேஸ்குமார், உலகநாதன், சரஸ்வதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர்வுக்கு 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல்!

தூத்துக்குடியில் கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on