மாப்பிள்ளையூரணி ஊராட்சி குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட குறைகளை தீர்க்க 4 கோடியே 88லட்சம் ஒப்புதல் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் மாதாநகர் மாதா கோவில் முன்புள்ள பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஊராட்சி மன்ற தவைலர் சரவணக்குமார் பேசுகையில், இந்த பகுதி வளர்ச்சியடைவதற்கு பல்வேறு வகையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிரந்தரமாக குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு 4 கோடியே 88 லட்சம் ஒப்புதல் பெறுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2024ல் ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுபாடு இல்லாமல் முழுமையாக எல்லோருக்கும் வழங்கப்படும் வகையில் பணிகள் நடைபெறவுள்ளன.
பொதுமாயணம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 2 தூய்மை பணியாளர்களுக்கு சுதந்திர தினவிழாவில் கலெக்டர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இதுபோல் பல சாதனைகள் ஊராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ள இருக்கும். அனைத்து பகுதி மக்களும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். என்னாலும் பொதுமக்களுக்காக தன்னலம் கருதாமல் உழைப்பேன் என்றார்.
ஊராட்சி பகுதியில் கொசு ஓழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, குடிநீர் சிக்கணம், சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்வது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கலை பண்பாட்டு துறை மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துணைத்தலைவர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலி;க்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மை சேவியர், சுகாதார ஆய்வாளர் வில்சன், உதவி காவல் ஆய்வாளர் செல்வன், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் காசு உசேன் அகமத்,
தூய மரியன்னை கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பரிபூரண செல்வி, மகாலட்சுமி கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, அலுவலர் வசந்தசேனா, வேளாண்மை துறை அலுவலர் ரோஹித்ராஜ், மீன்துறை ஆய்வாளர் பெல்சி ஷிபாணி, கால்நடை ஆய்வாளர் நிலை 1 நாகூர்மீரான், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உதவி பொறியாளர் மகேஷ்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு திட்ட அதிகாரி செல்வி புளோரன்ஸ், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, இலவச சட்டபணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த வக்கீல் சந்தனசெல்வம், மற்றும் ரவி என்ற பொன்பாண்டி, சுதாகர், கௌதம், மற்றும் ஊராட்சி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.