தூத்துக்குடி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75வது ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவரும், பள்ளியின் தாளாளருமான ஹாஜி மீராசா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் திறன் வெளிப்பாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவில் ஜாமியா பள்ளிவாசலின் நிர்வாக குழு துணைத் தலைவர் ரஹ்மான், செயலர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் சையது இப்ராஹிம் மூசா, உறுப்பினர்கள் ஆடிட்டர் சுபேர், முகம்மது உவைஸ், பீர் முகமது அசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் செய்து அலி வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்கள் மும்தாஜ், பிரபாகரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். பள்ளி துணை முதல்வர் முகம்மது யூசுப் இம்ரான் கான் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.