மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 75வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தேசிய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களை கௌரவித்தார்.
விழாவில் துணைத்தலைவர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாலன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.