இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் தேசிய கொடியை மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்றினார்.
தூத்துக்குடி 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா வரவேற்புரையாற்றினார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் அரசு அலுவலர்கள் 60 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் அருண்குமார்,
மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், பேபி ஏஞ்சலின், மெட்டில்டா, அதிஷ்டமணி, ரெங்கசாமி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ரிக்டா, ராமகிருஷ்ணன், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது. திட்ட பொறியாளர் ரங்கநாதன் நன்றியுரையாற்றினார்.