தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரை இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரை, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் மிக்கேல் அருள் ஸ்டாலின் துணை அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங், சதீஸ்குமார், ஜெரால்ட், கலைச்சொல்வன் உள்ளிட்ட திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.