தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய புதிய நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றியத்தில் தேர்வான புதிய நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்தது.
அதில் தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக ஜோதிடர் முருகன், செயலாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார், துணைச் செயலாளர்களாக கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, பொருளாளராக மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகளாக தர்மலிங்கம், சப்பானிமுத்து, சிவக்குமார், ஆகியோரை அறிவித்தனர்
இதனையடுத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை, நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் பணியாற்றி கிழக்கு ஒன்றிய பகுதியை முழுமையாக திமுக கோட்டையாக மாற்றி அதிமுக இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றி கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பின் போது மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிளை செயலாளர்கள் நிர்வாகிகள் காமராஜ், பொன்னுச்சாமி, ஆசைதம்பி, கோளராஜ், முருகன், வேல்ராஜ், ஆனந்தகுமார், ராயப்பன், முத்துராஜ், மாரியப்பன், சரவணன், சந்திரசேகர், அன்பு, ஆரோக்கியம், ஜெபராஜ், ராமசந்திரன், சுபாஷ், சுதாகர், கௌதம், கதிர்வேல், வேல்ராஜ், பழனி, சேகர், ஜீவாபாலமுருகன், மகாராஜன், குருசாமி, ராஜன், ஜெயசீலன், மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்