சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக.,15ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2022 அன்றைய தினம் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமஸ்தலங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.