• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட ஹெச்.எம்.எஸ்., தொழிற்சங்க மாவட்ட கவுன்சில் புதிய நிர்வாகிகள் தேர்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஹெச்.எம்.எஸ்.,  கவுன்சிலில் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து ஹெச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம் கட்டடத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் துறைமுகம் சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது :

துாத்துக்குடி மாவட்ட ஹெச்.எம்.எஸ் கவுன்சில் தலைவராக, ராஜ்குமாரும், பொதுச் செயலாளராக நானும் ( துறைமுகம் சத்யா ), காந்தி சேகரர் பொருளாளராகவும்,  ராஜலெட்சுமி ராஜ்குமார் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மற்ற பிற பொறுப்பாளர்களின் பட்டியல் வரும் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

செப்டம்பர் 25ம் தேதியில் தூத்துக்குடியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டிற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் மத்திய தலைமை பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

துாத்துக்குடி மாவட்டத்தில் ஹெச். எம். எஸ்., தொழிற்சங்கத்தில் பல்வேறு பிரிவு கள் உழைப்பாளர் சங்கம், ரயில்வே சங்கம், துறைமுக சங்கம், மின் வாரிய சங்கம் என்று பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறது. இவை எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கான சங்கமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஹெச்.எம்.எஸ்., மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ்குமார், தமிழ்நாடு ஹெச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம் மாவட்டத் தலைவர்  டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார், தமிழ்நாடு ஹெச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் காந்தி சேகர், ஹெச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்கம் கௌரவத் தலைவர் ஓம் சக்தி சங்கர் ஜி, ஹெச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்தர், ஹெச்.எம்.எஸ்., உழைப்பாளர் சங்க இணைச் செயலாளர் சுப்பையா கண்ணன், கௌரவ ஆலோசகர் சிம்பு கண்ணன், ஹெச்.எம்.எஸ்., துணைச் செயலாளர் செல்வா, ஹெச்.எம்.எஸ்.,ஒருங்கிணைப்பாளர் நிர்மல், ஹெச்.எம்.எஸ்.,செய்தி ஊடகப்பிரிவு மற்றும் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜெஸ்பர், எஸ்ஆர்எம்யு கிளைச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1.87 கோடி!

  • Share on