• vilasalnews@gmail.com

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி எஸ்ஆர்எம்யு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில் நிலையங்கள், மின்பாதை அமைப்புகள், சரக்கு நிலையங்கள், சரக்கு பாதை, பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, 2004க்கு முந்தைய ஒய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பாக எஸ்ஆர்எம்யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் அழகு விஜி தலைமை வகித்தார். இதில் காந்தி சேகர்  உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள்  சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் தேர்தல் - அமைச்சர், தேர்தல் ஆணையாளரிடம் விருப்பமனு தாக்கல்!

தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

  • Share on