• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் தேர்தல் - அமைச்சர், தேர்தல் ஆணையாளரிடம் விருப்பமனு தாக்கல்!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட விரும்பும் திமுகவினர் அமைச்சர் கீதாஜீவன், தேர்தல் ஆணையாளரான முன்னாள் எம்எல்ஏ ரவிச் ந்திரன் ஆகியோரிடம் விருப்பமனுக்கள் வழங்கினர்.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தலை முன்னிட்டுதூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகரத்தில் மாநகர செயலாளர், அவைத்தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை முன்னிட்டு, மாநகர செயலாளர் உள்ளிட்ட பதவிக்களுக்கு போட்டியிடக் கூடியவர்கள்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், திமுக தேர்தல் ஆணையரும் முன்னாள் எம்எல்ஏ வுமான ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விருப்பமனுக்களை வழங்கினர்.

இதில், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், கனகராஜ், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், தெய்வேந்திரன், கந்தசாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், பாஸ்கர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டச்செயலாளர்கள் ரவிந்திரன், சுரேஷ், பாலு, சதீஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராஜாமணி, மற்றும் கருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் வீடுகள்தோறும் தேசிய கொடி வழங்கல்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்!

  • Share on