தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட அணியான 47 மற்றும் 57 பிரிவினர் சார்பில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு, வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி தாளமுத்துநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா மற்றும் பேராசிரியர் முனைவர் வசந்தசேனா ஆகியோர் செய்திருந்தனர்.
நாட்டுநலப்பணிதிட்டத்தின் செயலாளர் செல்வி.சந்தியா தாளமுத்துநகர் மற்றும் சுனாமி காலணி பகுதிகளில் வீடுதோறும் தேசிய கொடியினை வழங்கினார். இந்நிகழ்வின் போது தாளமுத்துநகர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வமணி உடன் இருந்தார்.