• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் திருவிளக்கு பூஜை!

  • Share on

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மழை வளம், நாட்டின் ஒற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும்  ஆகியவற்றிற்கான சிறப்பு பஜனை வேண்டுதலுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 

இதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  • Share on

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருடன் எட்டையபுரம் நகர செயலாளர் நேரில் சந்திப்பு!

தூத்துக்குடியில் காவல் ஆய்வாளர் கார் கண்ணாடி உடைப்பு!

  • Share on