• vilasalnews@gmail.com

எப்போதும்வென்றானில் வீடு புகுந்து செல்போன் திருடியவர் கைது!

  • Share on

எப்போதும்வென்றானில் வீடு புகுந்து செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

எப்போதும்வென்றான் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செண்பகராஜ் (26) என்பவர் தனது வீட்டில் இன்று (08.08.2022) அதிகாலை குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே ஓடிய சத்தம் கேட்டு செண்பகராஜ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த தனது செல்போன் திருடு போனது மற்றும் வீட்டின் வெளிக் கதவு உடைக்கப்பட்டிருந்தது செண்பகராஜுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செண்பகராஜ் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் செண்பகராஜ் வீட்டிற்குள் புகுந்து செல்போனை திருடியவர் எப்போதும்வென்றான் நடுதெருவைச் சேர்ந்த தேன்ராஜ் மகன் கனகராஜ் (27) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரபாண்டியன், கனகராஜை கைது செய்து அவரிடமிருந்த திருடபட்ட ரூபாய் 14,000 மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார்.

மேலும் கனகராஜ் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

ஆத்தூர் புன்னக்காயல் ரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற, ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருடன் எட்டையபுரம் நகர செயலாளர் நேரில் சந்திப்பு!

  • Share on