• vilasalnews@gmail.com

ஆத்தூர் புன்னக்காயல் ரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற, ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!

  • Share on

புன்னக்காயல் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும், சாலையை சீரமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், துணைத் தலைவர் வாரியார் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு: 

ஆத்தூர் புன்னக்காயல் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும், சேர்ந்தபூமங்களம் பகுதியில் உள்ள புதுநகர் புன்னகாயல் சாலையை சீரமைக்க கோரியும் 27.06.2022 அன்று தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அன்று நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் திருச்செந்தூர் வட்டாட்சியர் நேரில் வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு தார் சாலையை ஜேசிபி மூலம் பெயர்த்து போட்டுள்ளார்கள். சாலைப் பணிகள் நடைபெறவில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். 

மேற்படி ரோடு குளக்கரையாக இருப்பதாலும் பொதுமக்கள் நிலை தடுமாறி அருகில் உள்ள குளத்தில் விழுந்து விடுகிறார்கள். மேலும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடையும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Share on

தூத்துக்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம்

எப்போதும்வென்றானில் வீடு புகுந்து செல்போன் திருடியவர் கைது!

  • Share on