சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் இன்று ( 21.12.2020 ) திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே பொருளாதாரத் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் 15 நாட்களில் ரூபாய் 100 க்கும் மேல் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து டிசம்பர் 21ஆம் தேதி அதாவது இன்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, திமுக மகளிரணியினர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ, சண்முகைய்யா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மார்க்கண் டேயன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சுமதி, துனைச் செயலாளர் விஜயகுமாரி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கள் கஸ்தூரி தங்கம், ஜெஸ்ஸி பொன்ராணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், கோட்டூ ராஜா, ஜெயக்குமார் ரூபன், தொண்டர் அணி வேலம்மாள், உமாதேவி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஓட்டப்பிடாரம் யூனியன் துணைச் சேர்மன் காசி விஸ்வ நாதன், திமுக நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், பிரதீப், முருக இசக்கி, சுரேஷ்குமார், ஆர்தர் மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், புதூர் ராதாகிருஷ்ணன், பில்லா ஜெகன், உமரி சங்கர், உட்பட சுமார் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.