தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மின்சார சட்டதிருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை உருவாக்கும் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை பாதிக்கும் இந்த மின்சார சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மின்சார சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மின்சார சட்டை மசோதா நகலை எரித்து, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராகவன், பொருளாளர் நம்பி ராஜன், துணை தலைவர்கள் சீனிவாசன், கணபதி, எஸ்.நடராஜன், நிர்வாகிகள் மணி, செல்வராஜ், சங்கிலி பாண்டி, ஏ.எம்.முருகன், ராமசந்திரன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.