தூத்துக்குடியில் வருகிற 11ம் தேதி வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கோட்ட அளவிலான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
அதன்படி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத கோட்ட அளவிலான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 11.08.2022 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு பீச்ரோட்டில் உள்ள "துறைமுக பொறுப்பு கழக மண்டபத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.