மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று திட்டத்தை தொடங்கி வைத்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியான ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமணை அருகில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, வசந்தகுமாரி, சக்திவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் கௌதம், பல்வேறு தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கூறுகையில்,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான் ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்சியும் அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி, மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாவட்டத்தில் தன்னிலை பெற்ற வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றுவதற்கு அனைத்து பணிகளையும் தமிழக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லோருக்கும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் அரசு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பை மற்றும் அதைச்சார்ந்த உபயோகப்படுத்தாமல் தேவையற்ற பொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு விதமாக பொதுமக்கள் தரம் பிரித்து கொடுத்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி மாப்பிள்ளையூரணி ஊராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். மக்கள் பணியாற்றுவதுதான் எனது கடமை என்பதை உணர்ந்து எந்நாளும் பொதுநலத்தோடு மக்களுக்காக உழைப்போம் என்றார்.