தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய உப்பள காலனியை சேர்ந்தவர் கந்தசாமி, மருந்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (53). நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி - திருநெல்வேலி ரோடு, மறவன்மடம் பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 2 சாந்தி கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலி செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சாந்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.