உலக சமாதனத்தை வலியுறுத்தி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.
அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும் நலமுடன் வாழவும், மாணவச் செல்வங்களின் கல்வி திறன் மேம்படவும், அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 31 அக்கினிசட்டி, 81 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது.
ஆன்மிக இயக்க மகளிர் அணி தலைவி பத்மாவதி முன்னிலையில் மாவட்டத் தலைவர் சக்தி முருகன் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், அருள்மிகு
செண்பகவல்லிஅம்மன் கோவில் வழியாக மன்றம் வந்தடைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனையடுத்து கருவறையில் அமைக்கப்பட்டுள்ள மேல்மருவத்தூர் அம்மன் சிலைக்கு பக்தர்கள் பால் அபிடேகம் செய்யும் நிகழ்ச்சியை வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓய்வு தாசில்தார் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் முத்தையா, வேலு, மன்ற செயலாளர் வரலெட்சுமி, பொருளாளர் கற்பகவள்ளி, தகவல் தொழிநுட்ப பொறுப்பாளர் கோபிநாத், மூர்த்தி, விஸ்வராஜ், ராஜலெட்சுமி, காசியம்மாள், ராதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.