![](https://www.vilasalnews.com/img/post/thumbimage/2020/12/21/1608551407.jpg)
கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்று தண்ணீர் வழங்கிட கோரி சேர்வைகரன்மடம் கிராம ஊராட்சி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிராம பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்வைகாரன் மடம் கிராம ஊராட்சியில், சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள் புரம், காமராஜ் நகர், சேர்வைகரன்மடம் ஆழ்வார் நகர், செந்தியம்பலம் ஆகிய பகுதிகள் உள்ளன. எங்கள் ஊராட்சியில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
எங்களுக்கான குடிநீர் தேவையானது, குளம் மற்றும் தேரிப்பகுதியிலிருந்து போர்வெல் அமைக்கப்பட்டு அதில் இருந்து வருகிறது. குளம் மற்றும் தேரிப்பதியில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரானது இயற்கையில் சுண்ணாம்புச் சத்து மிகுந்துள்ளது. எனவே இந்த நீரானது குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை. இந்த தண்ணீரை குடிப்பதால் கிராம பொதுமக்கள் பெரும்பாலானோர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மங்கல குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் 28 கிராமப் பஞ்சாயத்துக்கு வழங்கப்படுவது போல், எங்களது கிராமங்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் . இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.