• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போட்டி தேர்வு - கின்ஸ் அகாடமி நடத்துகிறது!

  • Share on

வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி போல்பேட்டையில் இயங்கி வரும் கின்ஸ் அகாடமி, மாணவர்களுக்கான போட்டி தேர்வு ரூ. 75 ஆயிரம் பரிசுத்தொகையோடு நடத்துகிறது என அறிவித்துள்ளனர்.

இது குறித்து கின்ஸ் அகாடமி நிறுவனர் எஸ். பேச்சிமுத்து கூறியதாவது..

ஏழை எளிய மாணவர்கள் அரசு பணியிடம் பெறுவதில் தடை ஏதும் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக முற்றிலும் இலவசமாக பல்வேறு அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சிகளை தூத்துக்குடி கின்ஸ் அகாடமி நடத்தி வருகிறது. இங்கு பயின்ற ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் அரசு பணியிடம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 க்கான முதன்மை தேர்வு, குரூப் - 1 முதல் நிலை தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

வரும் ஆகஸ்டு 15 ம் தேதி இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு, மாணவர்களுக்கான போட்டித்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். சுதந்திர போராட்ட துவக்க காலம் முதல் இன்றைய அரசு திட்டங்கள் வரையிலான நிகழ்வுகளிலிருந்து 75 கேள்விகள் கேட்கப்படும்.

அரசு போட்டி தேர்வுகள் நடப்பது போல அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாக அவை இருக்கும். கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கேள்வித்தாள்களிலும் 75 கேள்விகள் இருக்கும். மொத்த பரிசு தொகை 75 ஆயிரம் ரூபாய். அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 75 மாணவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர வரலாற்றினை இன்றைய மாணவர்கள் நிறை கூறுவதற்காகவும், அரசு போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் அனைத்து மாணவர்களும் இந்த போட்டித்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இதற்கான நுழைவு கட்டணம் எதுவுமில்லை. போட்டியில் கலந்த கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 13.08.2022 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குள் கின்ஸ் அகாடமி அலுவலகத்துக்கு நேரில் வந்து போட்டோ மற்றும் ஆதார் கார்டுடன் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து கொடுத்திருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்படிவம் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குள் நேரில் வந்து விண்ணப்படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வரும் 15.08.2022 மாலை 5.00 மணிக்கு தேர்வு துவங்கும். தேர்வு நேரம் 45 நிமிடம். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் மாலை 4.00 மணிக்குள் அகாடமி அலுவலகத்திற்குள் வந்து விடவேண்டும்.

தேர்வு முடிந்தவுடன் விடைதாள்கள் திருத்தப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படும். முதல் பரிசு ரூ.3,000 இரண்டாம் பரிசு ரூ. 2,000 மூன்றாம் பரிசு ரூ.1,000 வீதம் பரிசுகள் கொடுக்கப்படும். மீதமுள்ள தொகை மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். என தெரிவித்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிபாசறை கூட்டம்!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கல்!

  • Share on