• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிபாசறை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சிபாசறை கூட்டம் கலைஞா் அரங்கத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞரணியினருக்கான திராவிட பயிற்சிபாசறை கூட்டம் இன்று சனிக்கிழமை காலை தூத்துக்குடி, எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கத்தில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  நாஞ்சில் சம்பத் மற்றும் வழக்கறிஞா் சூர்யா சேவியா் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  கருத்துரையாற்றினர்.

இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது!

தூத்துக்குடியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போட்டி தேர்வு - கின்ஸ் அகாடமி நடத்துகிறது!

  • Share on