• vilasalnews@gmail.com

டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது!

  • Share on

தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்திஸ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று (05.08.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தூத்துக்குடி 3வது மைல் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் அருண்குமார் (23) என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார்  அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 3,000 மதிப்புள்ள 2 கிலோ 695 கிராம் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு - ரவுடி உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் இளைஞரணி திராவிட மாடல் பயிற்சிபாசறை கூட்டம்!

  • Share on