வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் ராசையா (எ) கலாம் (20) மற்றும் தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கற்குவேல் மகன் அருண்குமார் (20) ஆகிய 2 பேரும் கடந்த 04.08.2022 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மதுபோதையில் ரகளை செய்துள்ளனர்.
இதனை அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மணி (25) என்பவர் மேற்படி 2 பேரையும் சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மணி என்பவரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மணி நேற்று (05.08.2022) அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமலிங்கம் வழக்குபதிவு செய்து மேற்படி ராசையா (எ) கலாம் மற்றும் அருண்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட ராசையா (எ) கலாம் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அருண்குமார் மீது வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.