காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 04.08.2022 அன்று மேற்படி இளம்பெண் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மாவிலோடை பகுதியை சேர்ந்த குமரையா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர் மேற்படி இளம்பெண்ணின் தங்கை பொருட்களை எடை போட்டுக் கொண்டிருக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப் பார்த்த அந்த இளம்பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பிரதீப் மேனன் அவரிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி இளம்பெண் நேற்று (05.08.2022) அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் காடல்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்குபதிவு செய்து மேற்படி பிரதிப் மேனனை கைது செய்தார்.