சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் இருமுறை உயர்த்தியதைக் கண்டித்து தூத்துக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கேஎஸ் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், ஆறுமுகம், மாநகர் செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.