• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸார் மறியல் போராட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தவறான பொருளாதார கொள்கை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி, தோல்வியடைந்த பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கம், வேலை வாய்ப்பு இழப்பு என பல்வேறு நிலைகளில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சமீபகாலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இதையெல்லாம் பாஜக ஆட்சியினருக்கு நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களுக்காக,

இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியதன் அடிப்படையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில், மத்திய பாஜக அரசிற்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறும் மறியல் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், மார்க்கஸ், முத்துராஜ், எஸ்.பி. ராஜன், நிர்மல் கிறிடோபர், கோபால், செந்தூர் பாண்டி, தனுஷ், கிருஷ்ணன், கேடிஎம் ராஜா, சின்ன காளை, மைக்கில் பிரபாகர், ராகுல், ராஜ், சுடலை, ராஜ ரத்தினம், தனலெட்சுமி, சாந்தி, 

முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியன், ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், உடன்குடி நடராஜன், முத்துமணி, பிரவீன் துரை, எஸ்.எம். சகாயராஜ், ராஜா ராம், குமார முருகேசன், வாசிராஜன், கதிர்வேல், பால சுப்பிரமணியன், மைதீன், முனியசாமி, ஏ.ஜெயக்குமார், அந்தோணி சாமி, ஜெய கிங்ஷ்டன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!

செய்துங்கநல்லூரில் கனமழையில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

  • Share on