• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழகத்தில் சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தல், 

வரும் ஆகஸ்ட் 7ம் தேதி, மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்றைய தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் சென்று, கலைஞர் அரங்கம் முன்பு கலைஞரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. 

அதே போல, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூா்கழக பகுதிகளில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட உதவிகள் வழங்கிட கேட்டு கொள்ளுதல்,

வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இளைஞரணியினருக்கான திராவிட பயிற்சி பயிலரங்கத்தில், திமுக இளைஞரணி உறுப்பினா்கள் மற்றும் பொதுவான இளைஞரணி தோழா்கள் அனைவரும் தவறாது  கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளுதல்,

திமுக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச் செல்லும் விதத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திமுக மாவட்ட  நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா்கழகச் செயலாளா்கள்,  சார்பு அணிகளின் அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐஜேகே அறவழி ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸார் மறியல் போராட்டம்!

  • Share on