
தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இன்று (04.08.2022 வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறம் என அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்திருந்தது
அதனைத்தொடர்ந்து, இன்று (04.08.2022) காலை தூத்துக்குடி பாளை ரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில், தென்மண்டல இணை அமைப்பு செயலாளர் அருணாதேவி தலைமையில் ,
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், சாமானிய மக்களை பாதிக்கும் அரிசி மற்றும் பால்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.