மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ஆ.சண்முகபுரத்தில் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் முருகன், கௌதம், கபடி வீரர்கள், விழா குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.