• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

  • Share on

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் நாளை ( வியாழக்கிழமை ) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாழை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதனால் விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. 

இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி : மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கபடி போட்டி - வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார்!

  • Share on