• vilasalnews@gmail.com

தருவை மைதானம் கழிவறை ரொம்ப மோசம்... கூடுதல் கழிவறையும் வேண்டும் - இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை

  • Share on

தூத்துக்குடி தருவை மைதானத்தில் உள்ள கழிவறையை தூய்மை படுத்தி புதுப்பித்து தரவும் , கூடுதல் கழிவறை கட்டித்தர வேண்டியும் மாவட்ட ஆட்சியருக்கு இந்து இளைஞர் முன்னணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, இந்து இளைஞர் முன்னணியை சேர்ந்த கவிசண்முகம் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மாவட்ட விளையாட்டு மைதானமான தருவை விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறை நீண்ட நெடுங்காலமாக சுகாதாரற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்தும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தினசரி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வருகை தரும் முதியவர்களுக்கு அவ்வப்போது கடுமையான நோய் தொற்று ஏற்படுகிறது. 

மேற்படி கழிவறை தூய்மையாக இல்லாத நிலையில் பெரும்பாலான விளையாட்டு மைதானத்தின் பொதுமக்கள் ஒதுக்குப்புறத்திலேயே சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலைத் தொடர்ந்தால் விளையாட்டு மைதானமே பயனற்றுப் போகும் சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த கழிவறை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த தருவை மைதானத்தால் அதிகமான நபர்கள் பயன் பெற்று வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் குறைந்த மக்களே பயன்படுத்தி வந்தனர். தற்போது அதிகமாகன பொதுமக்கள் தருவை மைதானத்திற்கு வந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

எனவே கழிவறை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியும், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் விழா நடைபெற இருப்பதால், விழாவிற்காக அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலை இருப்பதால், தற்போது உள்ள கழிவறையை தூய்மை செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டியும் கேட்டுக் கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி : மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

  • Share on