• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் பகுதியில் புதிய நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி, அப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட ராஜபாளையம் பகுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில், 19லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டுவிழாவிற்கான பூமி பூஜையை, தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன் ராஜ் ஜெபம் செய்து, ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்து பூமிபூஜையை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், ஊர் நிர்வாகிகள் விக்டர், விமல், தொம்மை அந்தோணி, ஆசைத்தம்பி, பிரபு, வினோத், நிக்சன், மற்றும் மரியம்ஸ், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மில்கிமிஸ்ட் பார்லர் புதியகிளை - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

தருவை மைதானம் கழிவறை ரொம்ப மோசம்... கூடுதல் கழிவறையும் வேண்டும் - இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை

  • Share on