மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் நாடு தழுவிய மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமானது , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வண்கொடுமைகளை தடுக்க முறையான பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துதல், ரேசன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்களை வழங்கிடுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்திடுதல், கொரோனா நிவாரணத் தொகை 7,500 ரூபாய் வழங்கிடுதல், வேளாண் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற விலியுறுத்தி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் நாடு தழுவிய மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமானது , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட. மாதர் சங்க பெண்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவது தொடர்பான கோஷங்களை எழுப்பியவாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.