• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மில்கிமிஸ்ட் பார்லர் புதியகிளை - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

  • Share on

தமிழகம் முழுவதும் மில்கிமிஸ்ட் நிறுவனம் புதிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உணவு வகைக்கு தேவையானவைகளை விற்பனை செய்து வருகின்றன. அதன் கிளை போல்பேட்டை 60 அடி சாலையில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு குட்லக் டிரேடர்ஸ் சுதாசுதன் தலைமை வகித்தார். மில்கி மிஸ்ட் மேலாளர் சந்தீப் வரவேற்புரையாற்றினார்.

பாதிரியார் மைக்கேல்ராஜ் ஜெபம் செய்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எபனேசர் பெரியசாமி குத்துவிளக்கேற்றினார். முதல் விற்பனையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் தெய்வேந்திரன், வடக்கு மண்டல சுகாதரா ஆய்வாளர் ஹரிகணேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், மற்றும் ஜீவன்ஜேக்கப், எடிசன், மணி, அல்பட், அசோக், தூத்துக்குடி மில்கிமிஸ்ட் மேலாளர் செந்தில்வேல், உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் சுதன்கீலர் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசிற்கு எதிராக காங்கிரஸ் மறியல் போராட்டம் !

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!

  • Share on