• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசிற்கு எதிராக காங்கிரஸ் மறியல் போராட்டம் !

  • Share on

ஆகஸ்ட் 5ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியதின் பேரில், தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

மத்தியில் பாஜ.க.ஆட்சி அமைந்தது முதல் தவறான பொருளாதார கொள்கை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கபட்டு வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி, தோல்வியடைந்த பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கம், வேலை வாய்ப்பு இழப்பு என பல்வேறு நிலைகளில் மக்கள் தொடர்ந்து பாதிக்கபட்டு வருகிறார்கள். 

சமீப காலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

இதையெல்லாம் பாராளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் எடுத்து கொண்ட முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கபடுகிறது. இதன் மூலம் ஜனநாயக படுகொலையை பாராளுமன்றத்தில் பாஜக செய்து வருகிறது. 

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 5ம் தேதி வெள்ளிக்கிழமை நாடு தழுவிய மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆகஸ்ட் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 

இதில் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், மற்றும் முன்னனி அமைப்பு தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், வார்டு தலைவர்கள், தேசிய தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

  • Share on

விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீ

தூத்துக்குடியில் மில்கிமிஸ்ட் பார்லர் புதியகிளை - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

  • Share on