விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில், விளாத்திகுளம் ஹைஸ்கூல் ரோடு தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து, தென்னை மரத்தில் பிடித்த தீயை அணைத்தனர்.