தூத்துக்குடியில் லெவிஞ்சிபுரம் பகுதியில் ஆடு திருடிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் கண்ணன் (52) என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் கடந்த 31.07.2022 அன்று லெவிஞ்சிபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து கண்ணன் நேற்று (01.08.2022) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர்களான ராமச்சந்திரன் மகன் முருகன் (29) மற்றும் தங்கசாமி மகன் சின்னதுரை (42) ஆகிய 2 பேரும் மேற்படி கண்ணன் என்பவரது 2 ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் முருகன் மற்றும் சின்னத்துரையை கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 15,000 மதிப்புள்ள 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிர்களில் முருகன் மீது ஏற்கனவே தென்பாகம், புதுக்கோட்டை மற்றும் கோவில்பட்டி மேற்கு ஆகிய காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், எதிரி சின்னதுரை மீது தூத்துக்குடி தென்பாகம் மற்றும் முத்தையாபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.