• vilasalnews@gmail.com

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர் கைது!

  • Share on

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர் போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (01.08.2022) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி கிழக்கு பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் விக்னேஸ்வரன் (24) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 30,000 மதிப்புள்ள 20 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரியில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடியில் ஆடு திருடிய ரவுடி உட்பட 2 பேர் கைது!

  • Share on