• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரியில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி!

  • Share on

தூத்துக்குடியில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செயின்ட்  மேரிஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் ரதி தேவி வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையுரையாற்றினார். செயின்ட்  மேரிஸ் மகளிர் கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ்,  இளஞ்சிறார் நீதி குழும உறுப்பினர் ரூபன் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேரூரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை, வேம்பார் பீப்பிள்ஸ் ஆக்சன் பார் டெவலெப்மென்ட் ( PAD) , செயின்ட்  மேரிஸ் மகளிர் கல்லூரி ஆகியோர் இணைந்து  செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில், மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த உலகளவில் மனித கடத்தல் நிகழ்த்தப்படுவது குறித்து திரை மூலம் காட்சிப்படுத்தப்பட்டு, எடுத்துரைத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இதில், செயின்ட்  மேரிஸ் மகளிர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி அங்கன்வாடிக்கு உபகரணங்கள் வழங்கல்!

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர் கைது!

  • Share on