மாப்பிள்ளையூரணி அங்கன்வாடிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உபகரணங்கள் வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள வஉசி நகர் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சில உபகரணங்கள் கொடுத்து உதவிடுமாறு அங்கன்வாடியை சேர்ந்த பணியாளர்கள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து அங்கன் வாடி மையத்திற்கு தேவையான குழந்தைகள் அமர்வதற்கு சேர், மற்றும் பாய்களை அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.
இதில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியம்மாள் கதிர்வேல், பாரதிராஜா, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மற்றும் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.