தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 'என் தேசம் என் மக்கள்' குறும்படத்தை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
"என் தேசம் என் மக்கள்” என்ற தேசப்பற்றை ஊட்டும் குறும்படத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டார்கள்.
இதில் குறும்பட கதை மற்றும் தயாரிப்பாளர் கி.ம.சங்கர், இயக்குநர் அருந்ததி அரசு, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், முனைவர் ஜோசப் ஜான் கென்னடி, பி.எம்.சி. பள்ளி நிர்வாகி டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங், செய்தியாளர் ஞானதுரை, உதவி இயக்குநர்கள் தினேஷ் கௌசில், யு.எல்.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.