தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் இன்று பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 440வது திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக்ஸ்ட் 5-ம் தேதி அன்னையின் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மற்றும் மீனவர் அணியின் சார்பாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், துணை தலைவர்கள் வாரியார், சுவைதர், தொழில் பிரிவு மாநில செயலாளர் பாஸ்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல தலைவர்கள் ராஜேஷ்கனி வினோத், அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் காளிராஜா, விக்னேஷ், ஓம்பிரபு , சுந்தர் கணேஷ், கலை செல்வன், மீனவர் அணி ஜோசப், பொய் சொல்லான், நஸ்ரின், தமிழ் செல்வி, லட்சுமி, சங்கர் கணேஷ் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.