கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 2021 ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சிறப்புரையாற்றி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பட்டத்தினை வழங்கினார்.
வணிக நிர்வாகவியல், வணிகவியல், ஆங்கில இலக்கியம், கணிதவியல் துறை 100 மாணவ, மாணவிகள் பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் :-
ஏற்றத்தாழ்வு நிறைந்த வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும். நான் படித்த காலத்தில் இது போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இருந்ததில்லை இருந்தாலும் எனது தந்தை என்னை படிக்க வைத்து ஆளாக்கிய போது நான் ஓர் ஆசிரியராக தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தேன். கால சூழ்நிலை என்னை பொது வாழ்க்கையில் ஈடுபட செய்து தலைவர் கலைஞர் அமைச்சரவையில் ஒருமுறையும், தளபதியாளர் அமைச்சரவையில் இரண்டாவது முறை அமைச்சராகும் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
இதே போல் உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சி கிடைக்கும் வகையில் கல்வி படிப்பு, தகவல் தொழில்நுட்பம் என்ற படிப்போடு சேர்த்து பொது அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். உங்கள் தாய் தந்தையர் இன்றைய பட்டமளிப்பு விழாவில் மகிழ்ச்சியடைவதை கண்டு நீங்களும் மகிழ்ச்சியடைந்துள்ளீர்கள். உங்களுக்கு சில சமயங்களில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை தாய் தந்தைகளிடம் கூறி அதற்கு தீர்வு கண்டு கொள்வீர்கள்.
இனி வரும் காலங்களில் நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் அதற்கேற்றார் போல் அரசு பணியிடம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் இருக்கின்ற பணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
படிக்கின்ற காலத்தில் பெற்றோர்கள் கண்காணித்ததை போல் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இருக்க வேண்டும் பெற்றோர்கள் முக்கியமாக இருந்ததை போல் ஆசிரியர்களும் உங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்பதை எண்ணிபார்க்க வேண்டும். நாம் பயின்ற கல்வி ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்கும் உதவி செய்திடும் வகையில் அமைய வேண்டும். நீங்கள் இன்று இருக்கும் நிலைமையை அடைய பல சிக்கல்களை கடந்து தான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் நன்றாக அமைய மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
விழாவில் கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா, ஏபிசி மகாலட்சுமி கல்லூரி முதல்வர் பால ஷண்முக தேவி, சென்ட் மேரிஸ் கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், ஹோலிகிராஸ் ஹோம் சயின்;ஸ் கல்லூரி முதல்வர் ரூபா, டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், உள்பட கல்லூரி பேராசிரியர், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.