• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் பணம் திருடிய வழக்கில் வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் மேல அழகாபுரி மாரிமுத்து மனைவி அழகம்மாள் (41). இவரது வீட்டுக்கு உறவினரான கீழ அழகாபுரி ஜெயமுருகன் மகன் அழகு லட்சுமணன் (22) என்பவர் நேற்று மதியம் வந்தாராம். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை அவர் திருடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அழகம்மாள் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை  நடத்தி பணத்தை திருடிய அழகு லட்சுமணனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

  • Share on

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 2 பேர் கைது!

கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா - அமைச்சர் கீதாஜீவன் மாணவ, மாணவிகளுக்கும் பட்டம் வழங்கினார்

  • Share on