தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் நகர உட்கோட்ட போலீசார் நேற்று (31.07.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மகன் விஜயகுமார் (38) மற்றும் தூத்துக்குடி சாரங்கபாணி தெருவை சேர்ந்த செல்லையா மகன் திருமலைக்குமார் (56) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் விஜயகுமார் மற்றும் திருமலைக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 84 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் TN 69 BF 7835 (TVS Scooty) மற்றும் TN 69 AP 6567 (Hero Splendor) என்ற 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி விஜயகுமார் மற்றும் திருமலைக்குமார் ஆகிய 2 பேர் மீதும் ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.